தேனி

கம்பம் அரசு மருத்துவமனையில் அதாயி அரபிக்கல்லூரி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

16th Oct 2021 02:52 PM

ADVERTISEMENT

கம்பம் அரசு மருத்துவமனையில் அதாயி அரபிக்கல்லூரி சார்பில் நோயாளிகளுக்கு சனிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தேனி மாவட்டம் கம்பம் அதாயி அரபிக் கல்லூரி மற்றும் அதாயி உலமா பேரவை சார்பாக மீலாது நபி விழா கொண்டாடப்பட்டது. அரசு தலைமை மருத்துவர் ஜெ.பொன்னரசன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் சாதிக் முன்னிலை வகித்தார்.

அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த 200 ஆண் பெண் மற்றும் குழந்தை நோயாளிகளுக்கு ஆரஞ்சு பழம், செவ்வாழைப்பழம், திராட்சை பழம், ரொட்டி,, பிஸ்கட் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன.

அதாயி அரபிக் கல்லூரி முதல்வர் தாரிக் அஹ்மது ஆலிம் பிலாலி வழங்கினார். நிகழ்வில் அதாயி அரபிக் கல்லூரி மாணவர்கள், மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

Tags : Welfare program cumbam Government Hospital
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT