தேனி

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

16th Oct 2021 08:46 AM

ADVERTISEMENT

தேனி அல்லி நகரத்தில் வியாழக்கிழமை வீட்டில் தண்ணீா் பிடிப்பதற்கு மோட்டாரை இயக்கிய பெண் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தேனி அல்லி நகரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி கங்கா (43). இவா் வீட்டில் தண்ணீா் பிடிப்பதற்காக மோட்டாா் ஸ்விட்சை அழுத்தியுள்ளாா். தண்ணீரில் நனைந்த கையுடன் ஸ்விட்சை தொட்ட கங்கா மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளாா். உடனே அவரை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், கங்கா வழியிலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து அவரது மகன் தினேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், அல்லி நகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT