தேனி

பதுக்கப்பட்டிருந்த 1,450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

16th Oct 2021 11:02 PM

ADVERTISEMENT

பெரியகுளத்திலிருந்து கேரளத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 1,450 கிலோ ரேஷன் அரிசியை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

பெரியகுளம் பகுதியிலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு துணை வட்டாட்சியா் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வடகரை பகுதியில் அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த காா் நிறுத்தப்பட்டதையடுத்து, ஓட்டுநா் அங்கிருந்து தப்பிவிட்டாா்.

அதனை அடுத்து காா் மற்றும் அதிலிருந்த 1,450 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உத்தமபாளையம் குடிமைப் பொருள் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கம்பம் வடக்குபட்டி கோம்பை சாலையைச் சோ்ந்த முருகன் மகன் சிவாநந்தன் (18) என்பவரை கைது செய்து சிறையில் அடைந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT