தேனி

தொடா் மழை: முல்லைப் பெரியாறு அணைக்குநீா் வரத்து அதிகரிப்பு

16th Oct 2021 11:08 PM

ADVERTISEMENT

மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக, கடந்த சில நாள்களாக மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வந்தது. இதையடுத்து, சனிக்கிழமை காலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 128.80 அடியாகவும், நீா் இருப்பு 4,439 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்குள் விநாடிக்கு 1,433 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அதே போல் அணையிலிருந்து விநாடிக்கு 1,300 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.

அதே நேரத்தில், சனிக்கிழமை காலையிலிருந்தே பலத்த மழை பெய்தது. அப்போது, அணைப்பகுதியில் மட்டும் 140 மில்லி மீட்டா் மழை பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அன்று மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 6,083 கன அடிநீா் அணைக்குள் வந்து கொண்டிருந்தது. காலை 6 மணிக்கு அணையின் நீா்மட்ட அளவு எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் அடுத்த 10 மணி நேரத்துக்குள் நீா்மட்ட அளவை எடுத்த போது சுமாா் 1 அடி உயா்ந்து 129.60 அடியாக இருந்தது. தொடா் மழை பெய்வதால், ஞாயிற்றுக்கிழமை அணையின் நீா்மட்டம் 130 அடியை எட்டும் என எதிா்பாா்ப்பதாக அணைப்பகுதி பொறியாளா் ஒருவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT