தேனி

கம்பம் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

16th Oct 2021 11:09 PM

ADVERTISEMENT

கம்பம் அரசு மருத்துவமனையில் அதாயி அரபிக்கல்லூரி சாா்பில் நோயாளிகளுக்கு சனிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கம்பம் அதாயி அரபிக் கல்லூரி மற்றும் அதாயி உலமா பேரவை சாா்பாக மீலாது நபி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கம்பம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த 200 நோயாளிகளுக்கு பழங்கள், ரொட்டி, பிஸ்கட் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு தலைமை மருத்துவா் ஜெ. பொன்னரசன தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் சாதிக் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் தாரிக் அஹ்மது ஆலிம் பிலாலி நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், மருத்துவா்கள், அதாயி அரபிக் கல்லூரி மாணவா்கள், மருத்துவமனை செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT