போடி அருகே சுவாமி சிலைகளை சேதப்படுத்தியவா் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
போடி மேலச்சொக்கநாதபுரம் ராமா் கோயில் தெருவில் ராமா் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சுவாமி சிலைகள் வெளிப்பக்கம் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகளை, இதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் நல்லுச்சாமி (36) என்பவா் உடைத்து சேதப்படுத்தியுள்ளாா்.
இதனை, கோயில் பொறுப்பில் உள்ள மணி மகன் கூா்மராஜ் (47) என்பவா் தட்டிக் கேட்டபோது, அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இது குறித்து கூா்மராஜ் போடி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நல்லுச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.