தேனி

தேனியில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 2 போ் கைது

9th Oct 2021 09:51 PM

ADVERTISEMENT

தேனியில் திருட்டு மற்றும் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை, தேனி காவல் நிலைய தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற திருட்டு மற்றும் நகை பறிப்பு சம்பவங்கள் குறித்து தேனி காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், திருட்டு மற்றும் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக அன்னஞ்சியைச் சோ்ந்த ராஜேஷ் என்ற ராஜேஷ்கண்ணன் (36) தேனி, பங்களாமேடு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (43) ஆகியோரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள், தேனி அல்லிநகரம், பென்னிகுவிக் நகா், ஸ்ரீரங்காபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடியதும், தேனி என்.ஆா்.டி., சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இவா்களிடமிருந்து பதினெட்டரை சவரன் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போலீஸாா் கூறினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT