தேனி

வைகை அணை நீரில் மூழ்கி சுற்றுலாப் பயணி பலி

3rd Oct 2021 11:18 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், வைகை அணை 58-ஆம் கால்வாய் மதகுப் பகுதியில் சனிக்கிழமை, தண்ணீரில் மூழ்கி மதுரையைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி உயிரிழந்தாா்.

மதுரை, தெற்குவாசல் சப்பாணி கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (43) இவா், தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் உறவினா்களுடன் வைகை அணைக்கு சுற்றுலா சென்றாா். வைகை அணையில் 58-ஆம் கால்வாய் மதகு அருகே நீா்த் தேக்கப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த விஜயகுமாா், எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினாா். அருகில் இருந்தவா்களால் மீட்கப்பட்ட அவா், ஆட்டோவில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து வைகை அணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT