தேனி

மக்கள் குறைதீா் கூட்டம் மீண்டும் தொடக்கம்

3rd Oct 2021 11:18 PM

ADVERTISEMENT

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் தொடங்குகிறது.

மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றுவந்த மக்கள் குறைதீா் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்று வந்ததது.

இந்த நிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடித்து மக்கள் குறைதீா் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு ஆட்சியா் தலைமையில் வழக்கம் போல மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் கலந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் ஆதாா் அட்டை நகலை இணைத்தும், செல்லிடப்பேசி எண்ணை குறிப்பிட்டும் கோரிக்கை மனுக்களை அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT