தேனி

குமுளியில் விரைவில் பேருந்து நிலையம்: அமைச்சா் தகவல்

3rd Oct 2021 11:20 PM

ADVERTISEMENT

தமிழக எல்லையான குமுளியில் விரைவில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் நான்காவது கரோனா தடுப்பூசி முகாமை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்து அமைச்சா் பேசியது: மாநில அளவில் முதல் முகாமில் 28 லட்சம் பேரும், இரண்டாவது முகாமில் 16 லட்சம் பேரும், மூன்றாவது முகாமில் இருபத்தி ஆறு லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

மாவட்டத்தைப் பொறுத்தவரை 18 வயதுக்கு மேல் 10,44,558 போ் உள்ள நிலையில் முதல் தவணை தடுப்பூசியை, 5,72,302 பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 2, 05, 549 போ் செலுத்திக் கொண்டுள்ளனா். தேவைப்படும் பட்சத்தில் தேனி மாவட்டத்திற்கு போதுமான அளவு தடுப்பூசி வழங்கப்படும் என்றாா்.

பின்னா் தமிழக- கேரள எல்லைப் பகுதியான குமுளி பகுதிக்கு சென்ற அமைச்சா் சுப்பிரமணியன் அங்கு சுகாதாரத்துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமை பாா்வையிட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான குமுளியில் பேருந்து நிலையம் விரைவில் அமைக்கப்படும். போக்குவரத்துகழகம், வனத்துறை மூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

அப்போது மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமாா், திமுக வடக்கு மாவட்டச் செயலாளா் தங்க. தமிழ்ச்செல்வன், புதுதில்லி முன்னாள் சிறப்பு பிரதிநிதி பெ.செல்வேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT