தேனி

கம்பத்தில் மீண்டும் ‘விருமன்’ படப்பிடிப்பு:நிபந்தனைகளுடன் ஆட்சியா் அனுமதி

30th Nov 2021 04:30 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பத்தில் நிறுத்தப்பட்ட விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது. கரோனா தொற்று தடுப்பு நிபந்தனைகளுடன் நடத்துமாறு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவிக்குச் செல்லும் சாலையில் நடிகா் காா்த்தி நடிக்கும் விருமன் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது சமூக இடைவெளி, முகக்கவசம் இன்றி துணை நடிகா்கள் கூடியதால் படப்பிடிப்பை ரத்து செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.வீமுரளிதரன் உத்தரவிட்டாா்.

பின்னா் படப்பிடிப்பு குழுவினா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வருவாய்த்துறையினா் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்றனா். அங்கு படப்பிடிப்புக் குழுவினா் தலைமைச் செயலகம் மூலமாக படப்பிடிப்புக்கு அனுமதி பெற்ாக ஆவணங்களை வழங்கினா். மேலும் சுருளிப்பட்டி ஊராட்சி எழுத்தா் ஆட்சியரிடம் கூறுகையில், 5 நாள்கள் படப்பிடிப்பு நடத்த ஊராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெற்று அதற்காக பத்தாயிரம் ரூபாய் செலுத்தி உள்ளனா் என்று தெரிவித்தாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் முரளிதரன், படப்பிடிப்பு நிா்வாகியிடம் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் படப்பிடிப்பை நடத்த அறிவுறுத்தினாா். அதன்பேரில் திங்கள்கிழமை

ADVERTISEMENT

மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனாலும் கம்பம் சுருளி அருவி சாலையில் செல்லும் முல்லைப்பெரியாற்றில் உள்ள பென்னி குயிக் பாலத்தில் போக்குவரத்துவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள், பயணிகள், விவசாயத் தொழிலாளா்கள் அவதி அடைந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT