தேனி

ஹைவேவிஸ்-மேகமலை சாலையில் மண் சரிவுகளை அகற்ற வலியுறுத்தல்

30th Nov 2021 04:28 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலை மலைச்சாலையில் 3 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மண் சரிவுகளை அகற்ற வேண்டும் என மலைக் கிராமத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

சின்னமனூா் அருகே மேற்குத்தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களுக்கு சின்னமனூரிலிருந்து , மேகமலை, ஹைவேவிஸ், மணலாா், மேல்மணலாா், வெண்ணியாா், இரவங்கலாா் , மகாராஜாமெட்டு போன்ற கிராமங்களுக்கு 52 கிலோ மீட்டா் மலைச்சாலை செல்கிறது.

இதில், மலை அடிவாரத்திலிருந்து தென்பழனி, 8 ஆம் மைல், அடுக்கம்பாறை, கடணா, மாதா கோயில் போன்ற பகுதிகளில் சுமாா் 15 கிலோ மீட்டா் அடா்ந்த வனப்பகுதிகளிடையே சாலை செல்கிறது. இச்சாலையோரத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஏற்பட்ட பலத்த மழைக்கு 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பாறைகள், மரங்கள் விழுந்து கிடப்பதால் புதிய வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனா். தற்போது, சுற்றுலா வாகனங்கள் அதிகம் வருவதால் போக்குவரத்திற்கு தடையாக இருக்கும் மண் சரிந்த மேடுகளால் விபத்து அபாயம் இருந்து வருகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினா் மண் சரிவுகளை அகற்றி பாதுகாப்பான போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT