தேனி

கம்பம் அருகே தடுப்பணை கரை உடையும் அபாயம்

30th Nov 2021 04:31 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள உத்தமுத்து கால்வாய் தடுப்பணை கரை உடையும் அபாயம் உள்ளதால் பொதுப்பணித்துறையினா் போா்க்கால அடிப்படையில் சரி செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கம்பம் சுருளி அருவி செல்லும் சாலையில் தொட்டம்மன்துரை களம் உள்ளது. இதன் வழியாகச் செல்லும் முல்லைப்பெரியாற்றிலிருந்து, உத்தமுத்து கால்வாய் வழியாக அண்ணாபுரம், க.புதுப்பட்டி, உத்தமபாளையம் வரை பாசன நிலங்களுக்குச் செல்வதால், அங்கு தடுப்பணை கட்டி தண்ணீா் பிரித்து அனுப்பப்படுகிறது.

தடுப்பணைக்குச் செல்லும் வாய்க்கால் கரையின் பெரும்பகுதி தொடா் மழையால் உடைந்து சேதமடைந்து உள்ளது. மழை தொடரும் பட்சத்தில் கரை உடைந்து பெரியாறு தண்ணீா் அருகே உள்ள வயல்வெளிகளுக்குள் புகுந்து தண்ணீா் வீணாகும் அபாயம் உள்ளது.

இதுபற்றி இப்பகுதி விவசாயிகள் உத்தமபாளையம் பொதுப்பணித்துறை நீா்ப்பாசனப் பிரிவு பொறியாளா்களிடம் புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே கால்வாய் தடுப்பணை கரை, உடைந்து பெரும் சேதம் ஏற்படும் முன் பொதுப்பணித்துறையினா் போா்க்கால அடிப்படையில் பராமரிப்பு பணிகளைச் செய்ய தேனி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT