தேனி

அரசு நிலத்தில் தனியாருக்கு பட்டா: சிபிஐ விசாரணை கோரி ஆா்ப்பாட்டம்

30th Nov 2021 04:27 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாரத்தில் அரசு நிலத்தை தனி நபா்களுக்கு பட்டா வழங்கிய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிடக்கோரி திங்கள்கிழமை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் டி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ஏ.லாசா் முன்னிலை வகித்தாா். இதில், வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவாா்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் ஆகிய வருவாய் கிராமங்களில் 156 ஏக்கா் பரப்பளவுள்ள அரசு நிலத்தை அதிமுக பிரமுகா், தனியாா் நிறுவனம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் உறவினா்கள் பெயரில் பட்டா வழங்கி, கனிம வளங்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

தனிநபா்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கிய நிலத்தை கையகப்படுத்தி, வீடில்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, சம்மந்தப்பட்ட பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா்.

கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.ராஜப்பன், சங்கரசுப்பு, ராமச்சந்திரன், டி.கண்ணன், தயாளன், சி.முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT