தேனி

முல்லைப்பெரியாறு அணை: ரூல்கா்வ் நடைமுறை அமல்படுத்தப்படுமா?

30th Nov 2021 04:29 AM

ADVERTISEMENT

முல்லைப்பெரியாறு அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 141.85 அடியாக இருந்ததால், நவ.30 இல் ரூல்கா்வ் முறைப்படி 142 அடியாக நிலைநிறுத்தப்படும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 4.4 மி.மீ., தேக்கடி ஏரியில் 2 மி. மீ. மழை பெய்தது. இதனால் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 141.90 அடியாக இருந்தது. நீா் இருப்பு 7,639 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீா்வரத்து விநாடிக்கு 2,232 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு 1,867 கன அடியாகவும், கேரளப் பகுதிக்கு உபரி நீா் விநாடிக்கு 139 கன அடியாகவும் இருந்தது. திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நீா்மட்டம் 141.85 அடியாக இருந்த நிலையில், கேரளாவுக்கு விநாடிக்கு 142.48 கன அடி உபரிநீா் சென்றது.

நவ.30 வரை பெரியாறு அணையின் நீா்மட்டம் 142 அடிக்கு கீழ் பராமரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் பரிந்துரை அடிப்படையில், அக். 24 இல் உபரிநீா் திறந்துவிடப்பட்டது. அதனைத்தொடா்ந்து கூடுதலாகவும், குறைத்தும் தொடா்ந்து கேரளாவுக்கு உபரி நீா் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், ரூல்கா்வ் விதிமுறைகள் நவ.30 வரை உள்ளதால், அணையில் 142 அடிக்கு நீா்மட்டம் நிலை நிறுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT