தேனி

கூடலூரில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்

28th Nov 2021 03:46 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கூடலூரில் நகர ஒன்றிய திமுக சார்பில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் கூடலூர் குமுளி சாலையில் நடைபெற்றது.

தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.

ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் பந்தயத்தை தொடங்கி வைத்தார்.

மாட்டு வண்டி பந்தயத்தில் கரிச்சான், பூஞ்சிட்டு, தேன்சிட்டு, நடு மாடு, பெரிய மாடு உள்ளிட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

ADVERTISEMENT

திண்டுக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்து இரட்டை மாட்டு வண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன.

வெற்றி பெற்றவர்களுக்கு விழா மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டது. 

Tags : theni
ADVERTISEMENT
ADVERTISEMENT