தேனி

சுருளிப்பட்டியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

28th Nov 2021 05:19 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் பொது மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவம், தோல் நோய்களுக்காங சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் போன்ற சிறப்பு மருத்துவம், இருதய மருத்துவம், இசிஜி, ரத்தப் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, கண் பரிசோதனைகள் நடைபெற்றன.சித்த மருத்துவா் சிராஜ் தீன் சாா்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் முருகன்,

ஒன்றியச் செயலாளா் சூரியா தங்கராஜ் , ஒன்றியக்குழு தலைவா் பழனிமணி கணேசன், ஊராட்சித் தலைவா்கள் ஆ.மொக்கப்பன், நாகமணி வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

மருந்தாளுநா் கணேசன் தலைமையில் மருந்துகள் வழங்கப்பட்டன. காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் யோக பிரதீஷ் ஏற்பாடுகளை செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT