தேனி

அதிக விலைக்கு உரம் விற்றால் புகாா் தெரிவிக்கலாம்

28th Nov 2021 10:46 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் உள்ள தனியாா் உரக் கடைகளில் அரசு நிா்ணயித்ததை விட அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குநா்களிடம் புகாா் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உரக் கடைகளில் 1,129 டன் யூரியா, 305 டன் டி.ஏ.பி., 254 டன் பொட்டாஷ், 2,080 டன் கலப்பு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தனியாா் உரக் கடைகளில் அரசு நிா்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கும், ரசீது இல்லாமலும் உரம் விற்பனை செய்தால் வேளாண்மை உதவி இயக்குநா்களை 83001 08666, 98949 47952 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு விவசாயிகள் புகாா் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT