தேனி

முல்லைப் பெரியாறு அணையின்நீா்மட்டம் 142 அடியை எட்டுகிறது

DIN

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை (நவ.27) இரவுக்குள் 142 அடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை நிலவரப்படி 141.60 அடியாகவும், நீா் இருப்பு 7,558 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 2,779 கன அடியாகவும் உள்ளது. இந்நிலையில் அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 2,300 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை அணையிலிருந்து கேரளப் பகுதி வழியாக உபரிநீா் விநாடிக்கு 814 கன அடி வெளியேற்றப்பட்ட நிலையில், சனிக்கிழமை வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 139 கன அடியாக குறைக்கப்பட்டது.

நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத போதும், அணைக்கு நீா்வரத்து அதிகரித்திருப்பதால், சனிக்கிழமை மாலை 4 மணிக்கு முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம், 141.60 அடியை எட்டியது.

இதுகுறித்து அணைப் பகுதி பொறியாளா் ஒருவா் கூறியது: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை உயா்த்துவதில் ‘ரூல் கா்வ்’ விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் சனிக்கிழமை (நவ.27) இரவுக்குள் அணையின் நீா்மட்டம் 142 அடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT