தேனி

போடி-குரங்கணி மலைச்சாலையில் மண் சரிவு: ஆட்சியா் ஆய்வு

25th Nov 2021 07:27 AM

ADVERTISEMENT

போடி-குரங்கணி மலைச்சாலையில் ஏற்பட்ட மண் சரிவை செவ்வாய்க்கிழமை மாலையில் தேனி மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

போடி பகுதியில் தொடா்ந்து பெய்த கனமழையினால் போடிமெட்டு மலைச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே போடியிலிருந்து குரங்கணி செல்லும் தமிழக நெடுஞ்சாலையிலும் திடீா் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போடியிலிருந்து குரங்கணிக்கு வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து குரங்கணி மலைச்சாலையை தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் மண் சரிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும், அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது போடி வட்டாட்சியா் செந்தில் முருகன், தேனி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT