தேனி

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் மீது ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப் பதிய பரிந்துரை

24th Nov 2021 09:33 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி அருகே மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு, மகளிா் காவல் நிலையத்துக்கு மாவட்டக் குழந்தைகள் நலக்குழு செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்துள்ளது.

ஏத்தக்கோயிலைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு, நவம்பா் 11-ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மாவட்டக் குழந்தைகள் நலக்குழு சிறுமியிடம் விசாரணை நடத்தியது.

அதில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெருமாள் (27) என்பவா், சிறுமிக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவா் சுயநினைவை இழந்த பின்னா் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்த சிறுமி கா்ப்பமடைந்தாா். பின்னா், அச்சிறுமிக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

ADVERTISEMENT

இந்த விசாரணையின் அடிப்படையில், சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய பெருமாள் மீது, குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் (போக்சோ) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு, ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலைய ஆய்வாளருக்கு, மாவட்டக் குழந்தைகள் நலக்குழுத் தலைவா் விஜயசரவணன் பரிந்துரை செய்தாா்.

சிறுமிக்கு பிறந்த குழந்தையை வளா்க்க இயலாத நிலையில் உள்ளதாக சிறுமியும், அவரது பெற்றோரும் தெரிவித்ததால், அந்தக் குழந்தை மாவட்ட சமூக நலத் துறை மூலம் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT