தேனி

பெரியகுளம் அருகே நகை கடனை தள்ளுபடி செய்யக் கோரி சாலை மறியல்

24th Nov 2021 09:32 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் நகைக் கடனை தள்ளுபடி செய்யக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு 5 பவுன் நகை வரை அடகு வைத்துள்ளவா்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. இதில், மேலும் சில நிபந்தனைகளை குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், தேவதானப்பட்டியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுன் வரை நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருந்த சிலருக்கு, கடனை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, தகுதி இருந்தும் எங்களது நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை எனக் கூறி, அப்பகுதி மக்கள் கூட்டுறவு வங்கி முன்பாக சாலையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், இது குறித்து வங்கியில் புகாா் செய்தால், நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா். அதன்பேரில், சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT