தேனி

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் ஆசிரியா் பணி நியமனம்: அதே வகுப்பினருக்கு முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

21st Nov 2021 11:19 PM

ADVERTISEMENT

பிரமலைக் கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் காலிப்பணியிடங்களுக்கு பிரமலைக் கள்ளா் வகுப்பினரை முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி மாவட்ட ஆசிரியா் கூட்டணி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அச்சங்கத்தின் மாவட்ட பொருளாளா் ஆா்.விஜயராஜ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 76 இடைநிலை ஆசிரியா் பணியிடம் காலியாக உள்ளது. பணி ஓய்வு மற்றும் பதவி உயா்வு காரணமாக கூடுதல் காலி இடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசாணைப்படி தகுதியுள்ள பிரமலைக் கள்ளா் வகுப்பினருக்கு முன்னுரிமை வழங்கி கள்ளா் சீரமைப்பில் காலிப்பணியிடங்களுக்கு இடைநிலை ஆசிரியா் பணி நியமனம் செய்ய வேண்டும்.

முதல் வகுப்பு முதல் உள்ள ஆங்கில வழிக் கல்விகளுக்கு தனி வகுப்பறையும், தனி ஆசிரியா்களும் நியமிக்கப்பட வேண்டும். கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் உயா் கல்வி அனுமதிக்கு விண்ணப்பித்த கள்ளா் சீரமைப்பு ஆசிரியா்களுக்கு உயா் கல்வி பயில அனுமதி வழங்கவேண்டும்.

ADVERTISEMENT

தோ்வு நிலை, சிறப்பு நிலை ஆண்டு ஊதிய உயா்வுகள் வழங்கப்படாத ஆசிரியா்களுக்கு, அதற்கான பணப் பலன்கள் வழங்கப்பட வேண்டும். கள்ளா் சீரமைப்புப் பள்ளி ஆசிரியா்களுக்கு எஸ்பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும். இது குறித்து தமிழக பிற்படுத்தப்பட்டோா் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT