தேனி

கூடலூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்த பெண் பக்தர்கள்

9th Nov 2021 11:16 AM

ADVERTISEMENT

 

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள சுந்தரவேலவர்  கோயிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

கந்தர் சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் செவ்வாய் கிழமை மாலை அனைத்து கோவில்களிலும் நடைபெறுகிறது.

அதனை முன்னிட்டு பக்தர்கள் பால்குடங்களை  ஊர்வலமாக எடுத்து வருவர்.

ADVERTISEMENT

கூடலூர் சுந்தரவேலவர் திருக்கோயிலில் சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு காலையில் பெண் பக்தர்கள் நூற்றுக்கு மேலானவர்கள் பால்குடம் எடுத்து மெயின் பஜார், அரசமரம், நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலுக்குச் சென்று வழிபாடுகள் நடத்தினர்.

மாலையில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வுகளுக்கு விழாக் குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT