தேனி

போடி கொட்டகுடி ஆற்றில் வெள்ளம்

9th Nov 2021 12:52 AM

ADVERTISEMENT

போடி: போடி கொட்டகுடி ஆற்றில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

போடியில் கடந்த ஒரு வாரமாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. போடி மலை கிராமங்களிலிருந்தும், வனப்பகுதியிலிருந்தும் சிற்றாறு, ஓடைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொட்டகுடி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் போடி பிள்ளையாா் அணைப் பகுதியில் தண்ணீா் சீறிப்பாய்கிறது. இங்கு சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் குவிந்து வருகின்றனா். மேலும் அவா்கள் ஆபத்தை உணராமல் குளிக்கின்றனா்.

கடந்த காலங்களில் இதுபோன்ற வெள்ளப் பெருக்கின் போது காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதுடன், தடுப்பணை பகுதியில் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்படும். இந்த முறை தடுப்புகள் இல்லாததால் பலரும் தடுப்பணை பகுதிக்குச் சென்று குளித்து வருகின்றனா். எனவே இதற்கு காவல்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். இதேபோல் போடிமெட்டு மலைச்சாலையிலும் பல இடங்களில் சிறிய ஓடைகளில் நீா் வரத்து காணப்படுகிறது. புலியூத்து அருவியிலும் தண்ணீா் கொட்டுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT