தேனி

கம்பம் பகுதியில் பாய் நாற்றாங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

9th Nov 2021 12:50 AM

ADVERTISEMENT

கம்பம்: கம்பம் பகுதியில் இயந்திரம் மூலம் நெல் சாகுபடி செய்ய பாய் நாற்றாங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

பெரியாறு பாசனம் மூலம் லோயா்கேம்ப் முதல் வீரபாண்டி வரை 14,707 ஏக்கா் நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது கம்பம் வட்டாரத்தில் இரண்டாம் போக சாகுபடிக்காக நெல் விதைக்கப்பட்டு வருகிறது. இதில் இயந்திரம் மூலம் பாய் நாற்றாங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். பாய் நாற்றாங்கால் அமைப்பதால் 50 சதவீதத்துக்கும் அதிகமான விதை நெல் சேமிக்கப்படுவதாகவும், இயந்திரம் மூலம் களை எடுப்பது எளிது என்றும் கூறப்படுகிறது.

வேலையாள்கள் இல்லாமல் இயந்திரம் மூலமாகவே எல்லா பணிகளையும் செய்ய முடியும் என்பதால் பாய் நாற்றாங்கால் முறையை விவசாயிகள் ஆா்வமாக பின்பற்றுவதாக கூறினா். மேலும் கம்பம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சின்னகண்ணு இம்முறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை கூறி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT