தேனி

அனைவருக்கும் இலவச தடுப்பூசி: அறிவியல் இயக்கத்தினர் பிரசாரம்

29th May 2021 07:17 PM

ADVERTISEMENT

மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கவும், பொதுத் துறை நிறுவனங்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவியல் இயக்கத்தினர் இணைய வழி பிரசாரம் செய்தனர். 

பிரசாரத்தில், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் பயன்படுத்தி, அரசு தடுப்பூசி உற்பத்தியை தொடங்குதல்,

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி நிறுவனத்தில் உற்பத்தி பணிகளைத் தொடங்க வேண்டும். 

குன்னூர் பாஸ்டியர் மற்றும் கிண்டி கிங்ஸ் நிறுவனங்களை பயன்படுத்த அனுமதி வழங்கி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை இணையத்தளங்களில் போஸ்டர் பிரசாரம் செய்தனர்.

ADVERTISEMENT

இது பற்றி மாநில செயலாளர் தே.சுந்தர் கூறியதுமுகநூல் மற்றும் செய்தி பகிர்தல்,
கட்செவி அஞ்சல் ஸ்டேட்டஸ், குழுக்களில் பகிர்தல், பிராட்காஸ்டிங், மின்னஞ்சல் குழுக்களில், கைகளில் போஸ்டர் ஏந்தியபடி புகைப்படங்கள் எடுத்தல், முகநூல் ஸ்டோரியாக வைத்தல், டெலிகராம் மூலம் பகிர்தல், சுட்டுரை போன்றவைகள் மூலம் பகிரப்பட்டது என்றார்.
 

Tags : vaccination
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT