தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி பகுதியில் மழை பெய்ததால் நீர்வரத்து 18 நாட்களுக்கு பிறகு அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுருளி அருவியில் கடந்த ஏப்.15 ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதிக நீர்வரத்து வந்தது. அதன் பிறகு சிறிது சிறிதாக நீர்வரத்து குறையத் தொடங்கியது.
இந்நிலைய்ல் தற்போது காற்றழுத்தம் உருவானதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தால் சுருளி அருவியில் நீர்வரத்து சுமார் 18 நாட்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ளது.
தற்போது கரோனா 2 ஆவது அலை ஊரடங்கு காரணமாக, அருவி மற்றும் வளாகப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வரத்தடை உள்ளது. மேலும் தொடர்மழை அறிவிப்பு காரணமாக மேகமலை வன உயிரின சரணாலய ஊழியர்கள் அருவியின் நீர்வரத்தை கண்காணித்து வருகிறார்கள்.