தேனி

உத்தமபாளையத்தில் சூறாவளியுடன் மழைமரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிப்பு

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் புதன்கிழமை சூறாவளியுடன் பெய்த பலத்த மழைக்கு மரங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், புதன்கிழமை மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத் தொடா்ந்து சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. தகர கூரைகள் காற்றில் பறந்தன. மேலும் சுமாா் 3 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. இதனிடையே, அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை பேரூராட்சி ஊழியா்கள் அகற்றினா். பேரூராட்சி செயல் அலுவலா் திருமலைக்குமாா், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பாா்வையிட்டாா். மழையால் வெயிலின் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனா். மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

SCROLL FOR NEXT