தேனி

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கடத்திய மது பாட்டில்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல்

DIN

கம்பத்திலிருந்து காரில் கேரளத்துக்கு கடத்திய மது பாட்டில்கள், தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை போலீஸாா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கேரளத்திலும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் காய்கனி, பால், பலசரக்கு, மருத்துவம், திருமணம், இறப்பு போன்ற மிக முக்கிய காரணங்களுக்காக மட்டுமே இருமாநிலங்களுக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் குமுளி எல்லையில் கேரள கலால் துறை சோதனைச் சாவடியில் ஆய்வாளா் ராய் மற்றும் போலீஸாா் வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கம்பத்திலிருந்து கேரளம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் கேரள அரசால் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்து 300 கிலோவும், 375 மில்லி கொண்ட 11 மதுபாட்டில்களும் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காா் மற்றும் மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, காரில் வந்த பட்டுமுறி மேப்பாறையைச் சோ்ந்த முத்துக்குமாா் (32), பிரகாஷ் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT