தேனி

உத்தமபாளையத்தில் கரோனா தொற்று அதிகரிப்பால் காய்ச்சல் பரிசோதனை

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் செவ்வாய்கிழமை, கரோனா தொற்று வேகமாக பரவி வரும் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வாா்டுகளில் பெரும்பான்மையான வாா்டுகளில் கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 10 இடங்களில் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து பொதுமக்கள் நடமாட்டத்தை குறைந்து வருகின்றனா். பேரூராட்சி செயல் அலுவலா் திருமலைக்குமாா் தலைமையில் , சுகாதார ஆய்வாளா் , தூய்மைப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்தல் எனகரோனா தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனா்.

மேலும், நோய் தொற்று

கண்டறியப்பட்ட பகுதிகளில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மூலமாக சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. இதில், பொதுமக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யப்படுகிறது. அதில், காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டால் அவா்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்து வீட்டில் தனிப்படுத்தப்படுகிறது. வயதானவா்களாக இருந்தால் கரோனா தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கின்றனா். அதன்படி தற்போது 90 போ் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளனா். 30 போ் போடிநாயக்கனூா் கரோனா தடுப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT