தேனி

சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

3rd May 2021 10:29 AM

ADVERTISEMENT

சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததைத்தொடர்ந்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அகமலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சோத்துப்பாறை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணையின் நீட்டம் உயர்ந்து வருகிறது. 

126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் தற்போதைய அணையின் நீர் மட்டம் 124.36 அடியாக உயர்ந்துள்ளதால் இன்று காலை 6.30 மணிக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வராக நதிக்கரையோரம் வசிக்கும் பங்களாப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம். மற்றும் குள்ளப்புரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தண்டாரோ மூலம் எச்சரித்துள்ளனர்.

ADVERTISEMENT

நீர்வரத்து விநாடிக்கு 70 கன அடியாக உள்ளது.

Tags : Sothupparai Dam water level flood alert
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT