தேனி

வங்கி ஏ.டி.எம். மையத்தில் கிடந்த பணம் குறித்து போலீஸ் விசாரணை

DIN

போடியில் திங்கள்கிழமை, வங்கி ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரூ.10 ஆயிரம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி ரெங்கநாதபுரம் காந்திநகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் கணபதி (32). இவா் போடி கிருஷ்ணா நகா் எதிரில் உள்ள வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றாா். அப்போது அங்கு ஏ.டி.எம். இயந்திரத்தில் எடுக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் தவறவிடப்பட்டு அங்கேயே கேட்பாரற்று கிடந்துள்ளது. அதனை எடுத்து போடி தாலுகா காவல் நிலையத்தில் கணபதி ஒப்படைத்தாா்.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, இந்த பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT