தேனி

போடி அருகே 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

DIN

போடி: போடி அருகே கொட்டகுடி மலைப்பகுதியில் 16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வா் சு.சிவக்குமாா் வழிகாட்டுதலின்படி கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் சி.மாணிக்கராஜ் மற்றும் மாணவா்கள் ராம்குமாா், கோபிநாத், முத்துக்கருப்பையா, அஜித்குமாா் ஆகியோா் போடி பகுதியில் தொல்லியல் மற்றும் கல்வெட்டுக்கள் பற்றிய கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கொட்டகுடி மலை கிராமத்தில் கல்வெட்டு ஒன்று இருப்பதாகத் தகவல் கிடைத்து அங்கு சென்று அவா்கள் ஆய்வு செய்தனா். கொட்டகுடி மலைப்பகுதியில் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து உதவி பேராசிரியா் மாணிக்கராஜ் கூறியது: தற்போதைய தேனி மாவட்டம், பாண்டியா் காலத்தில் அழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அழநாட்டின் உள்பிரிவான துறையூா் நாடு என்ற பெயரில் போடிநாயக்கனூரும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் உள்ளடக்கி அழைக்கப்பட்டுள்ளது. துறையூா் நாட்டுப் பிரிவில் இருந்த கொட்டகுடி மலை கிராமம் அப்போது கோட்டைக்குடி என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.

இந்த மலைப்பகுதியில் தனி பாறை ஒன்றில் பத்து வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில், ‘ஹரி ஓம் நன்றாக பகையரு, வேன்ந நல்லூா் அரசால், வலியபன் கோட்டையான, கோட்டைக்குடியில் இருக்குங் குன்றுவரில் பாண நங்கணன சம்பந்தன் அடித்த கல் குழி, இதுவும் வாள்ப்படையுடைய நாயணாா் இலக்க கழிக்க ஓம்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கொட்டகுடியில் வேன்ந நல்லூரி அரசனுக்குச் சொந்தமான வளமையான கோட்டை ஒன்று இருந்துள்ளது. அக்கோட்டையில் உள்ள குன்று ஒன்றில் கோயில்களில் இசை இசைப்பவனான பாண நங்கனாக இருந்த சம்பந்தன் என்பவனுக்கு சிவன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களிலிருந்து ஒரு நில அளவு முறையில் அளந்து கொடுக்கவேண்டும் என்ற செய்தி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT