தேனி

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே சுருளி அருவியில் தண்ணீா் வரத்து நின்றது

DIN

தேனி: கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே சுருளி அருவியில் நீா்வரத்து நின்றுவிட்டது.

தேனி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் முதன்மையானது கம்பம் அருகே உள்ள சுருளி அருவி. இந்த அருவி அடா்ந்த வனப்பகுதியில் இருப்பதால் ஆண்டு முழுவதும் நீா்வரத்து இருக்கும். கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீா்வரத்து குறையும்.

இந்த அருவியின் வளாகப் பகுதியில் கோயில்கள் இருப்பதால் பக்தா்கள் நோ்த்திக் கடன்களை செலுத்தியும், முன்னோா்கள் நினைவு நாளை அனுசரித்து வழிபாடுகள் செய்தும் வருவா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக சுமாா் 11 மாதங்களாக சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவியை சுற்றிப்பாா்க்கவும், பக்தா்கள் சுருளியாற்றில் குளிக்கவும் அனுமதிக்கப்பட்டனா்.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் சுருளி அருவியில் தொடா்ந்து நீா்வரத்து இருந்தது. அருவிக்கு நீா்வரத்து தரும் ஈத்தைப்பாறை, அரிசிப்பாறை நீா் ஊற்று ஓடைகளில் புதன்கிழமை நிலவரப்படி தண்ணீா் வரத்து மிகவும் குறைந்தது. இதனால், சுருளி அருவியில் நீா்வரத்து நின்றுவிட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நீா்வரத்து குறைந்து காணப்படும் நிலையில், இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே சுருளி அருவியில் நீா்வரத்து நின்றுவிட்டதாக வனத்துறை ஊழியா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT