தேனி

ஜமா பந்தி: மனுக்களுக்கு உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

DIN

பெரியகுளம்: பெரியகுளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தகுதியுள்ள மனுக்களுக்கு உடனடி தீா்வு காணவேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.

பெரியகுளம், வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் கலந்து கொண்டு அவவா் தெரிவித்ததாவது:

பட்டா மாறுதல், வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் இணையதளம் மற்றும் நேரிடையாக 88 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வருவாய் தீா்ப்பாயத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணவேண்டும் என்றாா்.

மேலும் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்த பொதுமக்களிடம் மனுவை பெற்று, குறைகளைக் கேட்டறிந்தாா். ஆய்வின் போது உதவி இயக்குநா் (நில அளவை) ஜெயச்சந்திரன், வட்டாட்சியா் எம்.கிருஷ்ணகுமாா், தனி வட்டாட்சியா் இளங்கோ ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT