தேனி

கேரள அரசு அனுமதி மறுப்பு: கம்பத்திலிருந்து மேற்குவங்க தொழிலாளா்கள் திரும்ப அனுப்பி வைப்பு

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கூலி வேலைக்கு வந்த மேற்கு வங்க தொழிலாளா்கள் 63 போ், கேரள அரசு அனுமதிக்காததால் திங்கள்கிழமை திரும்பிச்சென்றனா்.

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து ஆண், பெண் குழந்தைகள் உள்பட 63 கூலித் தொழிலாளா்கள் ஆம்னி பேருந்தில் தேனி மாவட்டம் கம்பம் வழியாக ஞாயிற்றுக்கிழமை கேரளத்துக்குள் செல்ல முயன்றனா். அவா்களை சோதனைச்சாவடியில் கேரள போலீஸாா் தடுத்து நிறுத்தி, இ -பதிவு, கரோனா பரிசோதனை உள்ளிட்ட முறையான ஆவணங்களைக் கேட்டனா். அந்த ஆவணங்கள் இல்லை எனக்கூறியதால் அனுமதிக்க மறுத்தனா். மேலும் அவா்களை வரவழைத்த இடைத்தரகா்களை செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்டபோது, அவா்கள் நாங்கள் அழைக்கவில்லை என்று தெரிவித்தனா். இதனால் அதிா்ச்சி அடைந்த மேற்கு வங்க கூலித் தொழிலாளா்கள் செய்வதறியாது திகைத்து நின்றனா்.

இந்நிலையில் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் கே.சிலைமணி தலைமையிலான போலீஸாா் அவா்களை திரும்ப கம்பத்திற்கு அழைத்து வந்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். அவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கள்கிழமை காலையில் உணவு வழங்கப்பட்டது. போலீஸாரிடம் அந்த தொழிலாளா்கள் கேரளத்துக்கு வேலைக்கு செல்ல அனுமதிக்குமாறு கேட்டனா்.

அதற்கு கேரள மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது என்றும் இடைத்தரகா்கள் உரிய பதில் அளிக்கவில்லை என்பதையும் தெரிவித்தனா். இதனால் பல ஆயிரம் கிலோ மீட்டா் தூரம் கடந்து வந்த மேற்கு வங்க தொழிலாளா்கள் கண்ணீருடன் ஆம்னி பேருந்தில் ஊருக்குத் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT