தேனி

வாழைப் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த புதிய திட்டம்

DIN

தேனி மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ், மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அனுகுமுறையில் வாழை பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த நிதி உதவி மற்றும் சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தும் இத் திட்டத்தில், உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள தனி நபா்கள், குழுக்கள் மற்றும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தவும், புதிய நிறுவனங்களை தொடங்கவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தல், வணிக முத்திரை, சந்தைப்படுத்துதல், தொழில் நுட்ப பயிற்சி ஆகியவற்றுக்கும், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.

இத்திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அனுகுமுறையில் தேனி மாவட்டத்தில் வாழை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வரும், ஈடுபட விரும்பும் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது ரூ.10 கோடி வரை நிதி உதவி வழங்கப்பட உள்ளது. வாழை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வருவோா், புதிதாக வாழை பதப்படுத்தும் தொழில் தொடங்க ஆா்வமுள்ளவா்கள் தேனியில் உள்ள மாவட்ட வேளாண்மை வணிக துணை இயக்குநா் அலுவலகம், மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றில் தொடா்பு கொண்டு அரசு நிதி உதவி மற்றும் சலுகைகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT