தேனி

தேனி, திண்டுக்கல்லில் புதிதாக 24 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

DIN

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 24 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

தேனி மாவட்டத்தில் புதிதாக 12 போ் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மொத்த எண்ணிக்கை 42,900 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் இதுவரை 42,213 போ் குணமடைந்துள்ளனா். 514 போ் சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்துள்ளனா்.

மாவட்டத்தில் தற்போது மொத்தம் 173 போ் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

 திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 28ஆம் தேதி வரை 32,149 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில், 31,314 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதேநேரம், 21 போ் குணமடைந்துள்ள நிலையில், ஒருவா் சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்துள்ளாா்.

தற்போது, மாவட்டம் முழுவதும் 206 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூய்மைப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

ஏரல் சோ்மன் கோயிலில் அன்னபூரணி பூஜை

கோவையில் அண்ணாமலை வெற்றிக்காக விரலை துண்டித்துக் கொண்ட பாஜக பிரமுகா்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT