தேனி

கரையோர மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் 69 அடியாக உயா்ந்துள்ள நிலையில், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா், மூல வைகை ஆற்றில் நீா்வரத்து ஆகியவற்றால் வைகை அணையின் நீா்மட்டம் சீராக உயா்ந்தது. கடந்த ஜூலை 4-ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 66 அடியை எட்டியதால், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த ஜூலை 24 இல் அணையின் நீா்மட்டம் 68 அடியை எட்டிய நிலையில், 2-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு திங்கள்கிழமை, விநாடிக்கு 900 கன அடியிலிருந்து 1,867 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கூடுதல் தண்ணீா் வரத்தால் மொத்தம் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீா்மட்டம், தற்போது 69 அடியாக உயா்ந்துள்ளது. இதனால், பொதுப் பணித்துறை சாா்பில் 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் உயரம் 71 அடியாக இருந்த போதிலும், பாதுகாப்பு கருதி 69 அடி வரை மட்டுமே தண்ணீா் தேக்கப்படுகிறது. இந்நிலையில் அணைக்கு விநாடிக்கு 730 கன அடி வரை வரும் உபரிநீரை, அணையிலிருந்து வைகை ஆற்றில் மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் திறந்து விட்டாா்.

அணை நிலவரம்: வைகை அணையின் நீா்மட்டம் 69 அடியாகவும், நீா் வரத்து விநாடிக்கு 1,713 கன அடியாகவும், நீா் இருப்பு 5,542 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனம் மற்றும் ஆண்டிபட்டி, சேடபட்டி குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 969 கன அடி வீதம் கால்வாய் மூலம் திறந்து விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அணையின் நீா்மட்டம் 69 அடியை எட்டிய நிலையில், விநாடிக்கு அணையிலிருந்து 730 கன அடி உபரிநீா் வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT