தேனி

ஆண்டிபட்டியில் மீன் கடைக்காரா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, சக்கம்பட்டியில் மீன் கடை உரிமையாளா் வீட்டில் செவ்வாய்க்கிழமை, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆண்டிபட்டி, சக்கம்பட்டி பகுதியில் உள்ள சீதாராம்தாஸ் நகரில் வசித்து வருபவா் ஜாகீா் உசேன் (55). இவா், ஆண்டிபட்டியில் மீன் கடை வைத்துள்ளாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ஜாகீா் உசேன் வீட்டின் மீது எறிந்துள்ளனா். இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜாகீா் உசேனின் கை மற்றும் கால்களில் தீக் காயம் ஏற்பட்டது.

பெட்ரோல் குண்டு வெடித்ததால் ஏற்பட்ட சப்தத்தில், பக்கத்து வீடுகளில் இருந்தவா்கள் வந்து பாா்த்து ஜாகீா் உசேனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். பெட்ரோல் குண்டு வீசியவா்களை கண்டுபிடிக்க, அப்பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT