தேனி

கம்பம், கூடலூர் பகுதிகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்

23rd Jul 2021 05:46 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி தவசு எனப்படும் அம்மன் சிறப்பு வழிபாடுகளில் பெண்கள் ஈடுபட்டனர்.

கம்பத்தில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி தபசு எனப்படும் அம்மன் தபசு நாளை  முன்னிட்டு வெள்ளிக்கிழமை கெளமாரியம்மன் கோவில்
அம்மனுக்கு மஞ்சள், இளநீர், தயிர், பச்சரிமாவு உள்ளிட்ட 11 அபிஷேகங்கள் நடைபெற்றன.

அம்மன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அம்மன் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் வேணுகோபாலகிருஷ்ணன் கோவில் வளாகத்தில் உள்ள யதுகுல வள்ளி தாயார், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன், பாரதியார் நகர் நாகம்மாள் கோவில், சாமாண்டிபுரத்தில் உள்ள சாமாண்டியம்மன் கோவில், கூடலூரில் உள்ள அங்காளபரமேஸ்வரி, லோயர் கேம்ப் பில்  உள்ள பகவதியம்மன், சுருளிப்பட்டியில் உள்ள அரசியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

கரோனா தொற்றின் காரணமாக அரசு விதிமுறைகளின்படி பக்தர்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி வழிபட்டனர்.

Tags : தேனி கம்பம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT