தேனி

கூடலூரில் சொந்த செலவில் தூர் வாரிய கால்வாயிக்கு தண்ணீர் இல்லை: விவசாயிகள் அதிருப்தி

1st Jul 2021 06:10 PM

ADVERTISEMENT

கூடலூரில் சொந்த செலவில் கால்வாயில்  தூர் வாரியும் பாசனத்திற்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், கூடலூரில் சாமி வாய்க்கால் உள்ளது, இந்த கால்வாய் பாசனத்தின் கீழ் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு நன்செய் நிலங்கள் உள்ளன. தற்போது இந்தப் பகுதிகள் முதல் போக சாகுபடி நடைபெற்று வருகிறது. சாகுபடிக்கான தண்ணீர் சாமி வாய்க்காலில் தூர்வாருவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதனால் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம் சார்பில் சாமி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள், புதர் செடிகளை அகற்ற சாமி வாய்கால் பாசனத்தின் கீழ் உள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூபாய் 800 வீதம் வழங்கி கால்வாயை சொந்த செலவில் தூர்வாரினார்கள். சுமார் 20 நாட்களாக கால்வாய் தூர்வாரப்பட்டு, தற்போது முதல் போக சாகுபடிக்கு சாமி வாய்க்கால் பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

சாமி வாய்க்கால் ஆரம்பிக்கும் இடமான வைரவன் வாய்க்கால் ஒன்னாம் நம்பர் ஷட்டர் மூலம் சாமி வாய்க்காலுக்கு வரும் தண்ணீர் பெரிய வாய்க்காலில்  முழுவதும் கலந்து விடுகிறது. கடந்த ஒரு மாத காலமாக விவசாயிகள் சொந்த செலவில் சாமி வாய்க்காலை தூர் வாரியும் தண்ணீர் வராததால் கவலை அடைந்துள்ளனர். காரணம் இடையில் பெரிய வாய்க்கால் உள்ளது, அதன் வழியாக வெளியேறும் தண்ணீர் சாமி வாய்க்காலுக்கு செல்லாமல் மீண்டும் பெரிய வாய்க்காலில் கலந்துவிடுகிறது.

ADVERTISEMENT

இதை சரி செய்ய பொதுப்பணித்துறை மட்டும்தான் செய்ய முடியும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் தற்போது சாமி வாய்க்கால் பாசன விவசாயிகளின் நெல் சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. சாமி வாய்க்காலுக்கு வரும் தண்ணீர் வீணாகாமல் பெரிய வாய்க்காலில் கலக்காமல் இருப்பதற்கு பொதுப்பணித்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து பாசன நிலங்களில் முதல் போக சாகுபடி நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்,

இதில் தாமதம் ஏற்பட்டால் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
 

Tags : theni Farmers
ADVERTISEMENT
ADVERTISEMENT