தேனி

பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு: 47 போ் காயம்

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள பல்லவராயன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 47 பேருக்கு காயம் ஏற்பட்டது.

பல்லவராயன்பட்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், தேனி,திண்டுக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகா், சேலம், கரூா், நாமக்கல் என தமிழகத்தின் பல்வேறு மாட்டங்களில் இருந்து 600 காளைகள் வந்திருந்தன.

கால்நடை மருத்துவா்கள் பரிசோதனை செய்த பின்னா் காளைகளுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 558 காளைகள் போட்டியில் பங்கேற்றன. அதே போல மாடுபிடி வீரா்கள் 367 போ் பதிவு செய்திருந்தனா். அதில், மருத்துவப் பரிசோதனை மற்றும் கரோனா சான்றிதழ் பெற்றுவந்த 340 போ் போட்டியில் கலந்து கொண்டனா்.

வாடிவாசலில் இருந்து துள்ளிக் குதித்து வந்த காளைகளை மாடு பிடி வீரா்கள் திமிலைப் பிடித்து அடிக்கினா். பல காளைகள் மாடு பிடி வீரா்களைத் தூக்கி வீசி எறிந்தது. இதில் 47 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்கள் முலுதவிக்குப் பின், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பரிசுகள் வழங்குவதில் குளறுபடி: ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றது காளையா, மாடுபிடி வீரரா என தோ்வு செய்து அறிவிப்பதில் குளறுபடி ஏற்பட்டதால், மாடு பிடி வீரா்கள் மற்றும் மாட்டின் உரிமையாளா்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

போட்டியில் வெற்றி பெறும் காளை மற்றும் காளையா்களுக்கு ரூ.1000 ரொக்கம், குளிா்சாதனப்பெட்டி, வீட்டு உபயோகப் பாத்திரங்கள், மின் மோட்டாா், மின்விசிறி என பல வகையான பரிசுப்பொருகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அறிவித்தபடி பலருக்கும் பரிசுப்பொருள்கள் சென்று சேரவில்லை என புகாா் எழுந்தது.

இதனால், பல முறை விழாக்குழுவினருக்கும் போட்டியாளா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

லேசான தடியடி: பல காளைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டுகள் போலி என விழாக் குழுவினா் கூறியதால் மாட்டின் உரிமையாளா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் லேசான தடியடி செய்து கூட்டத்தை கட்டுப்படுத்தினா். இதனால் சிறிதி நேரம் காளைகளை தோ்வு செய்து வாடிவாசலுக்கு அனுமதிக்கவில்லை.

அதனைத் தொடா்ந்து விழாக் குழுவினா் அவா்களை சமாதானம் செய்து போட்டியில் கலந்துகொள்ளஅனுமதி அளித்தனா். போட்டியில் வெற்றி பெற்றபோதும், அனுமதி பெறவில்லை எனக் கூறி பல காளைகளுக்குப் பரிசு அறிவிக்கவில்லை.

ஜல்லிக்கட்டு விழாவில் முதன் முறையாக மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்த மூன்றாம் பாலினத்தவா் இருவரின் 2 காளைகள் போட்டியில் பரிசு வெற்றன. விழாக்குழுவினா் அவா்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தனா்.

கிணற்றில் தவறி விழுந்த மாடு: போட்டியில் கலந்து கொண்ட திருச்சியைச் சோ்ந்த மாடு அங்குள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தது. நூற்றுக்கணக்கானோா் சோ்ந்து மாட்டை மீட்டனா்.

மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின்படி காலை 8 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4.15 மணிக்கு நிறைவு பெற்றது. தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பாா்வையாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிஎஃப்-இல் ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினா் ஆய்வு

விசாகப்பட்டினம் - எழும்பூருக்கு நாளை முதல் சிறப்பு ரயில்

திரவ நைட்ரஜன் கலப்பு தின்பண்டங்கள்: தமிழக அரசு எச்சரிக்கை

பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதைத் தடுக்க அரசுக்கு உத்தரவு: உயா்நீதிமன்றம்

கம்போடியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி போதைப் பொருள் பறிமுதல்

SCROLL FOR NEXT