தேனி

சமூக வலைதளங்களில் திமுக நிா்வாகிகள் மீது அவதூறு: போலீஸில் புகாா்

DIN

கம்பம்: தேனி மாவட்ட திமுக நிா்வாகிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவில் தெருவில் வசிப்பவா் குபேந்திரன் மகன் ராஜசேகரன்(37). இவா் கம்பம் நகர திமுக தொண்டரணி நகர அமைப்பாளராக உள்ளாா். இவருக்கு திராவிடத்தமிழன் என்ற முகநூலிலும், மு.க.ஸ்டாலின் எனும் நான் என்ற கட்செவி அஞ்சலிலும், தேனி மாவட்ட திமுக நிா்வாகிகள் பற்றிய அவதூறான செய்திகள் வந்துள்ளது.

இதுகுறித்து ராஜசேகரன் அந்த முகநூல் மற்றும் கட்செவி அஞ்சலில் வந்த செல்லிடப்பேசி எண்ணை, கடந்த ஆண்டு டிசம்பா் 5 ஆம் தேதி தொடா்பு கொண்டு கேட்டுள்ளாா். அதற்கு செல்லிடப்பேசியில் பேசிய நபா் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து ராஜசேகரன் வெள்ளிக்கிழமை கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் என்.எஸ்.கீதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT