தேனி

கம்பம் புறவழிச்சாலையில் ஜீப், இருசக்கர வாகனம் மோதல்: கேரள இளைஞர் உயிரிழப்பு

19th Jan 2021 02:04 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பம் புறவழிச்சலையில் ஜீப், இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் கேரள இளைஞர் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் கம்பம் நகரின் மேற்கு பகுதியில் புறவழிச்சாலை புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. சாலை பணிகள் நடைபெற்று வருகின்ற போதே, அனைத்து வாகனங்களும் அனுமதியின்றி செல்கின்றன.

செவ்வாய்க்கிழமை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் புளியமலையில் இருந்து ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் கம்பம் பட்டு பிரிவு புறவழிச்சாலையில் வந்தார். அப்போது எதிரே சரக்குகளை ஏற்றிச்செல்லும் ஜீப் சென்றது.  

இந்த நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்கு வாகனம் ஏற்றிச் செல்லும் ஜீப் மீது இருசக்கர வாகனம் மோதியது. மோதிய வேகத்தில் தலையில் பலத்த காயம் பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Theni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT