தேனி

கூடலூர் நகர்ப்பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

4th Jan 2021 11:31 AM

ADVERTISEMENT

கூடலூர் நகராட்சி பகுதிகளில் தமிழக அரசின் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சி பகுதிகளில் தமிழக அரசின் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

 அ.தி.மு.க. நகரச் செயலாளரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான ஆர்.அருண்குமார் பயனாளிகளுக்கு ரூபாய் 2500 ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு, ஒரு சவளம் கரும்பு ஆகிய வற்றை வழங்கினார். 

நிகழ்வில் நகர துணை செயலாளர் பாலை ராஜா, அவைத் தலைவர் ஆர்.துரை, வழக்கறிஞர் கரிகாலன், மாணவரணி பூவேஸ்குப்தா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடலூர் நகராட்சி பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ஆர்.அருண்குமார் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

Tags : pongal gift
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT