தேனி

தேனியில் அங்கன்வாடி ஊழியா்கள் 4-ஆவது நாளாகக் காத்திருக்கும் போராட்டம்

DIN

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சாா்பில் 4-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவித்து காலமுறை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் கடந்த பிப்.22-ம் தேதி முதல் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தேனியில் 4-ஆவது நாளாக மாவட்டத் தலைவா் சாந்தியம்மாள் தலைமையில் அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போரட்டத்தை ஆதரித்து அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட இணைச் செயலா் முத்தையா, அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்க மாவட்டத் தலைவா் முருகேசன், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் ஜெயபாண்டி ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT