தேனி

18ஆம் கால்வாய் நீட்டிப்புப் பணிகள்: அடிக்கல் நாட்டினார் துணை முதல்வர் 

13th Feb 2021 06:29 PM

ADVERTISEMENT

லோயர் கேம்ப் அருகே உள்ள 18ஆம் கால்வாயில் நவீன முறையில் பராமரிப்பு வேலைகளை தொடங்க, காணொளிக் காட்சி மூலம் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார். 

தேனி மாவட்டம், லோயர் கேம்ப் அருகே 18ஆம்  கால்வாய் உள்ளது, இந்த பதினெட்டாம் கால்வாய் மற்றும் நீட்டிப்பு கால்வாய்களில் பராமரிப்புப் பணிகளை நவீன முறையில் மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

அதற்கான வேலைகளை செய்ய சனிக்கிழமை சென்னையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.

அதே நேரத்தில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வில் 18ஆம் கால்வாய் தொடங்கும் இடமான ஜீரோ பாயிண்ட் இடத்தில் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். டி. கே. ஜக்கையன், கூடலூர் நகர அதிமுக செயலாளர் ஆர்.அருண்குமார் மற்றும் பொதுப்பணித் துறையினர் கலந்து கொண்டு ஜீரோ பாய்ண்ட் பகுதியில் பூஜைகள் நடத்தினர்.
 

ADVERTISEMENT

Tags : theni
ADVERTISEMENT
ADVERTISEMENT