தேனி

கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

11th Feb 2021 08:08 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில் வியாழக்கிழமை கல்லூரி வேலைவாய்ப்புத்துறை சார்பில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

செயலாளர் என்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்புத்துறை ஒருங்கிணைப்பாளர் பி.சமந்தா வரவேற்றுப் பேசினார். முதல்வர் ஜி.ரேணுகா, ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் ஆகியோர் முகாமை வாழ்த்தி பேசினர்.

நல்லதொரு வேலைவாய்ப்பை பெறுவதற்கு ஆங்கிலக்கல்வி புலமை இன்றியமையாதது என்றும், வெளி நாடுகளில் வேலை பார்ப்பதற்கு டோபல் தேர்வு முக்கியமானது என்றும், தேர்வில் வெற்றி பெறும் வழிமுறைகள் பற்றியும் மும்பை ஆங்கில அகாதெமி மேலாளர் பி.ஜெனித்ராஜ் பேசினார். அனைத்து துறை இறுதியாண்டு மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Cumbum
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT